11 Aug 2016

ஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளி, ஜமாலியா, இக்பால் நகர், இறக்கக்கண்டி போன்ற பகுதிகளில் வாழ்கின்ற குடிநீர் தேவையுடைய  100 குடும்பங்களுக்கு  குடிநீர் இணைப்பைப் பெற்றுக்
கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் 8 இலட்சம் ரூபா நிதியினை திருமலை அமல் நற்பணி மன்றத்திடம் இன்;று கையளித்தது

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் திருகோணமலையில் இயங்கி வரும் அமல் நற்பணி மன்றத்தின் தலைவர் அஹமட் கபீர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நிதி வழங்கப்பட்டது

கொழும்பில் அமைந்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து இந்த நிதியினை அமல் நற்பணி மன்றத்தின் உப தலைவர் அஜ்மல் இஸ்பஹான், பொருலாளர் அஹமட் பாரிஸ் ஆகியோரிடம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார். இதன் போதுமட்டக்களப்பு கெம்பஸ்நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நாடு பூராகவும் முன்னெடுத்து வரும் குடிநீர் தேவையுடையவர்களுக்கான இலவச குடிநீர் வழங்கு திட்டம் ஏற்கனவே, மட்டக்களப்பு, அம்பாறை,யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.  


SHARE

Author: verified_user

0 Comments: