(இ.சுதா)
கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகஷ்டஇ கஷ்ட பிரதேச பாடசாலைகளில் நிலவும் பிரதான பாடங்களுக்கான ஆசிரியர்களை துரிதமாக நியமிப்பதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், அரசியல் வாதிகள் நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென பிரதேச பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், போன்ற பிரதான பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் போதியளவு இல்லாமை பாரிய பிரச்சினையாகவுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் படி நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள தேசிய, மாகாண பாடசாலைகளுக்கு ஒரே வகையான கலைத்திட்டமும் பொதுவான பரீட்சை முறைகளுமே பின்பற்றப்படுகின்ற நிலையில் ஆளணிப் பங்கீட்டில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.
நகர்புறப் பாடசாலைகளுக்கு வழங்கப் படுகின்ற பௌதீக, மனித வளங்கள் கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கப் படுவதில்லை ஆனால் மாணவர்கள் பொதுவான தேர்ச்சி மட்டத்தினை எய்துவதற்கான பலப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. இதில் அதிகம் சித்தி பெறுவோர் சகல வசதிகளுடனுன் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கின்ற நகர்புற பாடசாலை மாணவர்களே இதனால் இலவசக் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதில் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் எதுவிதமான பிரத்தியேக வகுப்புக்களும் இல்லாத நிலையில் பிரதான பாடங்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாத நிலையில் பல பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றமை வேதனை தரக்கூடிய விடயமாகும். இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். ஒரு சில ஆசிரியர் இடமாற்றங்கள் இடம் பெறுகின்ற போதிலும் ஆசிரியர்கள் சில காரணங்களை முன்வைத்து நகர்புறப் பாடசாலைகளுக்கு சென்று விடுகின்றனர். பின்னர் பதில் ஆசிரியர் நியமிப்பதில் பாரிய பிரச்சனை ஏற்படுகின்றன. இதற்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாகும்.
எனவே கஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் எதிர் கால நலன் கருதி பிரதான பாடங்களில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களை எதிர் காலத்தில் குறித்த பிரதேசங்களில் நியமிப்பதற்கு கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள், உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பிரதான பாடங்களுக்காக நிலவும், ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களிலே நிவர்த்தி செய்யப்படும், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்பிக்கக் சுடிய 1134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இதற்காக வேண்டி நியமிக்கப் படவுள்ளனர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இதற்குரி நடவடிக்ககைளை முன்னெடுத்துள்ளது. என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம் இவ்விடையம் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment