மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில் தாக்குதலுக்குள்ளானதாக கூறி மேலும் ஒரு சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் திங்கள் மாலை (ஜுலை 25, 2016) அனுமதிக்கப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் கற்கும் 13 வயதான ஏ.எஸ். சதாம் என்ற சிறுவனே தான் தாக்குதலுக்குள்ளானதாக பொலிஸில் வாக்குமூலம் அளித்ததுடன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு அன்னதானமாகக் கிடைத்த சோற்றுப் பொதியை (நாரிசாச் சோறு) தான் எடுத்து வந்து கொண்டிருந்தபோது வீதியில் வழி மறித்த நபர்கள் சோற்றுப் பொதியை சிதைத்து கொட்டச் செய்து விட்டு தன் மீது தாக்குதல் நடத்தியதாக சிறுவன் வாக்குமூலமளித்துள்ளான்.
முன்னதாக, கும்பல் ஒன்று இரவில் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் ஞாயிறன்று (ஜுலை 25, 2016) அதிகாலை 2.30 மணிக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தினடிப்படையில் ஒருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
ஞாயிறு (ஜுலை 24, 2016) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் காத்தான்குடி 5 ஐச் சேர்ந்த அல் ஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எல்.எம். அர்ஷாத் (வயது 18) மற்றும் ஏ.எம்.எம். ஹஷீப் (வயது 17) ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவங்கள் பற்றி கர்தான்குடிப் பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment