4 Jun 2016

கன்னகுடாவில் கூத்து அரங்கேற்ற விழா

SHARE
(பழுவூரான்)

மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றமானது தமிழர்களின் கலை கலாசாரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு கடந்த வியாழக்கிழமை 02.06.2016 மாலை கன்னகுடாவில் 'பாரத பகலிரவுப் போர்'
எனும் வடமோடிக் கூத்தினை அரங்கேற்றினார்கள்.

கலைச்செல்வம் திருநாவுக்கரசு கைவண்ணத்தில் உருவான இந்த கூத்தினை அண்ணாவியர்களான ம.பசுபதி, சி.விநாயகலிங்கம் ஆகியோர் நெறிப்படுத்த இருபது கலைஞர்களுடன் இந்தக் வடமோடிக்கூத்து அரங்கேறியது. இக்லை மன்றம் கடந்த 1994ம் ஆண்டு இறுதியாக 'அல்லி நாடகம்' என்ற கூத்தினை அரங்கேற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பின்பு பல கூத்துக்களை ஆலயங்களில் ஆடி வருவதாகவும், தமிழர்களுடைய பாரம்பரிய கலை,பண்பாடு,கலாசாரம் அழியாமல் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்பதை அக்கழகத்தினர் தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: