1 Jun 2016

மலேரியா அற்ற இலங்கை என்ற சர்வதேசச் சான்றிதழ்.

SHARE
கந்த காலங்களில் மலேரியா நோய் பாரியளவில் பீடித்திருந்தது, ஆனால் தற்போது இலங்கையில் மலேரியா நோயை முற்றாக ஒழித்து விட்டோம் என்பதில் பெருமை
கொள்கின்றோம் என்ற நிலமை ஏற்பட்டிருக்கின்றது. என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நவரெட்ணராஜா கிறேஸ் தெரிவித்துள்ளார்.

மலேரியா நோய் தடுப்பு தொடர்பில் செவ்வாய்க் கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்ககு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ககையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மலேரியா அற்ற இலங்கை என்பதை உறுத்திப் படுத்தி உலக சுகாதார இஸ்தாபனம் இவ்வருடத்திற்குள் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்றையும் தரவிருக்கின்றது. இந்நாட்டில் பாரிய உயிர் கொல்லியாகக் காணப்பட்ட இந்த மலேரியா நோயை கடந்த 3 வருடகாலமாகவிருந்து முற்றாக நாம் ஒழித்துள்ளோம். இது நாங்கள் அனைவரும் எடுத்துக ;கொண்ட பாரிய முயற்சியின் பலனாகக் கிடைத்துள்ளது


உலய சுகாதர இஸ்த்தாபனம் இந்த வருடம் இலங்கைக்கு வருகை நந்து எமது பதிவுகளைப்பார்வையிடுவது, மாத்திரமல்லாது மக்களிடமும் சென்று பல ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன் பின்னர்தான் இலங்கைக்கு மலேரியா அற்ற இலங்கை என்ற சர்வதேசச் சான்றிதழைத் தரவிகிக்கின்றார்கள். 

ஆனாலும் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மீண்டும் திரும்பி வரும்போதும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாத்துறை சார்பாகவும், வேறு காரணங்களு;ககாக வருபவர்கள் மத்தியில் ஒரு சிலரிடம் மலேரியா நோய் இலங்கைக்குள் வருகின்றது. ஆனாலும், இலங்கைக்குள் இருக்கும் யாரிடமும் கடந்த 3 வருடங்களால மலேரியா நோய் இல்லை.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு இலங்கை மலேரியா நோய்த் தடுப்பு பிரிவு மலேரியா நோய் தொற்றாத தடுப்பு மாத்திரைகளை கொடுத்து அனுப்புகின்றார்கள். அதுபோல் இலங்கைக்குள் வெளிநாடுகளிலிருந்து வருபர்களிடமிருந்து மலேரியா நோய் பரவாமலிருக்க அவர்களை அடையாளம் கண்டு மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கும் முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: