
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்ததோடு திருத்தங்கள் சமர்பிப்பற்கும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
(முதலாம் இணைப்பு)
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
காலை 10 மணிக்கு சபாநாயகரின் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவலறியும் சட்டமூலம் தொடர்பான விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தகவல் அறியும் குழு ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், முரண்பாடுகள் காரணமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு, இந்த சட்ட மூலத்திற்கான யோசனைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சரவையில் அது சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஊடக அமைப்புக்கள் மற்றும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களினால் நல்லாட்சி அரசாங்கம், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகள் வெளிக்கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment