17 May 2016

பாலியல் துஷ்பிரயோகம் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவருக்கும் பிணை

SHARE
(எச்..ஹுஸைன்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி - கர்பலா பிரதேசத்தில் 24.04.2016 அன்று இரவு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்;தர்கள் இருவரும் சரீர மற்றும் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட இருவரும் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த பிணை மனு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா  முன்னிலையில் செவ்வாய்க்கிழமை 17.05.2016 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீரப்  பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் கடந்த 10.05.2016 அன்று ஆஜர்படுத்தப்பட்டபோது மே 24 வரை விளக்கமறியல் நீடிக்கும் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களில் ஒருவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிலும் மற்றவர் கல்கிஸைப் பொலிஸ் பிரிவிலும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதான குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: