15 May 2016

காந்திபுரம் சிவசக்தி இந்து கலாமன்றத்திற்கு, கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைப்பு.

SHARE
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் மட்டக்களப்பு காந்திபுரம் சிவசக்தி இந்து கலா மன்றத்திறத்திற்கு இசைக் கருவிகள், வாழ்வாதார உதவி, உலர் உணவுப்பொதி, மாணவர்களுக்கான கற்றல் புத்தகங்கள், இந்துமத நன்நெறிக் கோகையான பகவத்கீதை, என்பன ஞாயிற்றுக்  கிழமை காலை (15) வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கிலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையின் தலைலவர் த.துஷ்யந்தன் தலைமையில் மட்.காந்திபுரம் கலைமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் கி.குணநாயகம், காந்திபுரம் ஸ்ரீ மாணிக்கப் பிளையார், பத்தினியம்மன் ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ.அ.ரவிசர்மா குருக்கள், மற்றும் காந்திபுரம் சிவ சக்தி இந்துகலா மன்ற உறுப்பினர்கள்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் காலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் எமது இந்து மத்தின் அறக் கருத்துக்கள், தத்துவங்கள், அடங்கிய விடையங்களை எடுத்தியம்ப வேண்டும், கடந்த காலத்தில் இப்பகுதி மக்கள் பல இன்னல்களைச் சந்தித்தவர்கள், அம்மக்களுக்கு அறுதல் அளிக்கும் வகையில் இந்து தத்துவக் கருத்துக்களை வழங்கி ஆறுதல்ப்படுத்த வேண்டும்.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் செயற்பாடு மிகவும் மெச்சத்தக்கது. இச்சபை சமய நெறிகளை எடுத்தியம்புவதோடு மட்டுமல்லாமல் சமூகரீதியிலும் ஒற்றுமை, அமைதி, கூட்டுவழிபாடு, இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல், வாழ்வாதார உதவி போன்ற நலத்திட்டங்களையும், அறிமுகப்படுத்தி வருகின்றார்கள். இச்சபையுடன் சேர்ந்து, மாட்டரீதியில் எமது, செயற்பாடுகளையும் முன்னெடுக்கலாமென, இதன்போது கலந்து  கொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசா உத்தியோகஸ்தர் கி.குணநாயகம், தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து மக்கள் மத்தியில் காணப்படும் குறைபாடுகளை இனம் கண்டு, அவர்களுக்குத் தேவையான வசதிவாய்ப்புக்களை, அவ்வப்பபோது இச்சபை நிவர்தி செய்து வருகின்றது. இச்சபையுடன் இணைந்து எதிர்காலத்தில் தன்னாலான உதவிகளை நல்க காத்திருப்பதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் எதிர் காலத்தில் எமது மக்கள் மத்தியில் புரிந்துணர்வுகளையும். நல்லொழுக்கங்களையும் எடுத்தியும்பும் என, இதன்போது கலந்து கொண்ட கொள்கைகள் மற்றும், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் தெரிவித்தார்.

இந்து இளைஞர் மன்றங்கள் வெறுமனே பஜனை மன்றங்களாக மாத்திரமில்லாமல், கிராமங்களில் கலை கலாசார விழுமியங்களை மேம்படுத்தவும், மற்றும், ஆய்வு நிலையங்களாக மிளிரும் வேண்டும், பஜனை நிகழ்வுகள் என்பன இக்கிராமத்தில் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகள் கிராமங்கள் தோறும், நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் இதன்போது தெரிவித்தார். 

கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையின் எதிர்காலச் செயற்பாடுகளை, மக்களின் பங்களிப்புடன் சேர்த்து நிறைவேற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என இதன்போது இச்சபையின் செயலாளர் வ.சக்திவேல் தெரிவித்ததோடு இந்நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகளும், இந்து சமய சொற்பொழிவுகளும் இடம்பெற்றமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.SHARE

Author: verified_user

0 Comments: