19 Apr 2016

ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செயற்படுவது நாட்டிற்கு முன்னுதாரணமாக அமையும் - லங்காபேலி.

SHARE
ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செயற்படுவதானது,  நாட்டிற்கு முன்னுதாரணமாக அமையும் இவ்வாறான வேலைத் திட்டங்களினூடாக ஊடகவியலாளர்களுக்கும்
சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. மக்கள், மத்தியில் சிவில் அமைப்புக்கள் வடக்கு கிழக்கில் பாதிக்கப் பட்டுப்போயுள்ள மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.

என ஊடக தொழிற் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் லங்கா பேலி தெரிவித்தார்.

வடடக்கு கிழக்கில் பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும், ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்வது தொடர்பான கலந்துரையால் ஒன்று திங்கட் கிழமை (18) திருகோணமலை விலா ஹொட்டலில் நடைபெற்றது. 

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதில் வடக்கிழக்கிலே பணியாற்றுகின்ற தெரிவு செய்யப்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட வடகிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள், மற்றும், இதன்போது யுதத்த மற்றும் சமாதானத்திற்கான அறிக்கை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் முகமட்.அஸாட், ரெயின்போ அமைப்பின் இணைகப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹைஸ்,  உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்புக்களும், வடக் வடக்கு கிழக்கில் பல கஸ்ட்டமான காலகட்டகங்களைக் கடந்து தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.  இந்நிலையில்தான் சிவில் அமைப்புக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை ஏற்படுத்தி மேற்படி இரு சாராரும் இணைந்து மக்களின் பிரச்சனைகளுக்கு, எவ்வாறு தீர்வு காணலாம் என சிந்தித்தன் அடைப்படையில் தற்போது நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்.

அந்த வகையில் வடக்கு கிழக்கிலே மக்கள் மத்தியில் பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும், இணைந்து அந்த அந்த மாகாணங்களிலே காணப்படும் மக்களின் பிரச்சனைகளை இனங்கண்டு, அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கக் கூடிய சூழல் தற்போது உருவாகி வருகின்றது.

கடந்த காலங்களில் சிவில் அமைப்புக்கள் தனியாகவும். ஊடகவியலாளர்கள் தனியாகவும் அவர்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள், தற்போது இவ்விருவரையும், ஒன்றிணைந்து பயணிக்கச் செய்துள்ளதனால் அதிகளவு மக்கள் சேவையை எற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. இச்செயற்பாடனானது, சிங்கள மற்றும், தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுடாக சமூகம் சாந்த பல பிரச்சனைகள், வெளிக் கொணரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 

மக்களின் பிரச்சனைகளை கட்டுரை வடிவில் வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கும், ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும் நாம் கலந்தாலோசித்து வருகின்றோம். எனவே எதிர் காலத்தில் தொடர்ந்து, சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும், ஒன்றாகச் செயற்பட்டால் மக்களின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். இச்செயற்பாடானது நாட்டுக்கு ஒரு முன்னுதாணரமாக இருக்கும். என அவர் மேலும் குறிப்பிட்டார்.
















SHARE

Author: verified_user

0 Comments: