19 Apr 2016

நாங்கள் பேரினவாத அரசிகளோடு ஒன்றாக இருந்திருந்தால் எங்களுடைய பிரதேசங்களும் முன்னேற்றங் கண்டிருக்கும்

SHARE
நாங்கள் பேரினவாத அரசிகளோடு, அந்த அரச கொள்கையோடு ஒன்றாக இருந்திருந்தால் எங்களுடைய பிரதேசங்களும் தென்பகுதி பிரதேசங்கள் போன்று அனைத்திலும் முன்னேற்றங் கண்டிருக்கும் என கிழக்கு மாகாண
விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியபோரதீவு லக்கி இஸ்ட்டார் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை (15) மாலை  பெரியபோரதீவு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… 

நாங்கள் எங்களுடைய கண்ணை விற்பதற்க தயாராக இல்லை என்ற படியால் இந்த சித்திரத்தினை சிறப்பாக வரைந்த கொள்ள முடியவில்லை. நாங்களும் பேரினவாத அரசோடு அந்த அரச கொள்கையோடு ஒன்றாக நாங்கள் இருந்திருந்தால் எங்களுடைய பிரதேசங்களும் தென்பகுதி பிரதேசங்கள் போன்று அனைத்திலும் முன்னேற்றங் கண்டிருக்கும் நாங்கள் அவ்வாறு இருந்திருந்தால் எங்களுடைய தமிழ் எங்கோ ஒடியிருக்கும். அதாவது கதிர்காமத்திற்கு செல்கின்றோம் முருகனை வழிபட அங்கு முருகன் மாத்திரந்தான் இருக்கின்றார். முருகனை கொண்டுவைத்தவர்கள் அதன் பாராம்பரியத்தினை பாதுகாத்தவர்கள் எங்கு போய்விட்டது என்பதனை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும். இதே போன்று எங்களுடைய பாரம்பரிய தலங்கள் அகிய முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் காலியில் இருந்ததாக தெரிகின்றது. அதற்கான தடையங்களும் இல்லை இது போன்று தென்பகுதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது இதற்காத்தான் எங்களுடைய இருந்தமிழை இருத்திய பின்னரே நாங்கள் அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இப்பொழுது இந்த நாட்டிலே வித்தியாசமான அரசியல் சூழ்நிலை எழுந்துள்ளது இந்த மாற்றத்தனை குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர். உண்மையில் கணக்கு பார்க்கப் போனால் பெரும்பான்மை மக்கள் அனேகமாக ஓரிடத்திலேதான் நின்றிருந்தார்கள் இது பிளவுபட்ட காரணத்தினால் தான் சிறுபான்மை மக்கள் பங்களிப்பின் ஊடாக இந்த நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது. இதற்கு முழு ஆதரவு வழங்காவிட்டாலும் கூட அதற்கு எங்களுடைய அனுசரணையை வழங்கி எங்கள்மீது கரிசினை காட்டும் விதத்திலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். கிழக்கு மாகாண நிருவாத்திலே எங்களுடைய கட்சி பங்கேற்று இருக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு எங்களிடம் மக்கள் கூடுதலான எதிர்பார்ப்பினை வைத்திருக்கின்றார்கள். அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் நியாயமானவைதான். அதனை நிறைவேற்றக் கூடிய யதார்த்தம் அங்கு இல்லை என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2016 ஆண்டு காலப் பகுதிக்குள்ளே ஒரு அரசியல் மாற்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதனை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம். அந்த அரசியல் அமைப்புச் சட்டத்திலே சுயநிர்ணய உரியை, தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மேவிய தமிழ் பிரதேசத்திலே ஏற்படுத்திக் கொண்டு, ஒன்றுபட்ட இலங்கையிலே எங்களுடைய சுதந்திரத்தினை சுயமாரியாதையினை வளர்க்கின்ற அதேவேளை இந்த நாட்டில் சகோதரத்துவத்தினை ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டு இருக்கின்றோம். அதனைச் செய்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் நாங்கள் ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும் நல்ல சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்கள் வழிநின்று இந்த நாடு ஒரு இனத்திற்கோ மத்திற்கோ அல்ல என்ற எண்ணப்பாட்டுடன் செல்லுகின்ற வகையில் எமது சிந்தனை அமைய வேண்டும். எமது இலக்கின் ஊடாக பிரந்திய சுயாட்சி என்கின்ற விடயம் எமக்கு கிடைக்கும் நாங்கள் அரசியல் தீர்வுத்திட்டத்தின் ஊடாக நாங்கள் சிறப்பு பெறமுடியும். இதற்கு அனைத்து மக்களினதும் ஒற்றுமை செயற்பாடு எமக்குத் தேவை என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: