19 Apr 2016

எம்.எச்.எம்.ஹம்ஸாவுக்கு ”அல்-2000” சமூகசேவைகள் அமைப்பு பாராட்டு

SHARE
(டிலா)

மருதமுனையைச் சேர்ந்த எம்.எச்.எம்.ஹம்ஸா பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும்,மேலதிக மாவட்ட நீதிபதியாகவும்(18-04-2016) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை அறிந்து மருதமுனை”அல்-2000” சமூகசேவைகள் அமைப்பு வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளது.
தொழில் நீதிமன்ற நீதிபதி டீ.கொஸ்தா முன்னிலையில் ஹம்ஸா சத்தியப்பிரமாணம் செய்து கடமையைப் பொறுப்பெற்றுக்; கொண்டார்.

மருதமுனை அல்-மனாா் மத்திய கல்லுாரியின் பழைய மாணவரான இவா் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டக் கல்வியை சிறப்புடன் பயின்று சிறந்த சட்டத்தரணியாக வெளியேறினாா். கல்முனை நீதவான் நீதிமன்றம்,உயர் நீதிமன்றம் போன்றவற்றில் சட்டத்தரணியாக கடமையாற்றிய இவா் அரச சாா்பற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் சட்ட ஆலோசகராக கடமையாற்றியுள்ளாா். நீதவான் போட்டிப்பரீட்சையில் உயா்ந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த எம்.எச்.எம்.ஹம்ஸா யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதியாக கடமையாற்றி பயிற்ச்சியை பெற்றுக்கொண்டாா். இன்நிலையில் தற்போது பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற நீதிபதியாகவும்,மேலதிக மாவட்ட நீதிபதியாகவும்தொழில் நீதிமன்ற நீதிபதி டீ.கொஸ்தா முன்னிலையில் (18-04-2016) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளாா்.

அம்பரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும் மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஏ.எம்.இப்றகீம் உடைய மூத்த புதல்வி பாத்திமா சர்மதா (கிராம சேவை உத்தியோகத்தா்) திருமணம் செய்து கொண்ட எம்.எச்.எம்.ஹம்ஸாவுக்கு தற்போது 03 குழந்தைகள் உண்டு.  மருதமுனையின் வரலாற்றின் மற்றொரு பொக்கிஷமாக திகழும் நிதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நமது தாய் நாட்டுக்கும் மண்ணுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும். இவரது ஆயுள் நீடிக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என மருதமுனை ”அல்-2000” சமூகசேவைகள் அமைப்பு வாழ்த்து தெரிவித்து பிராத்திக்கின்றது.

”அல்-2000” சமூகசேவைகள் அமைப்பு 
 மருதமுனை
SHARE

Author: verified_user

0 Comments: