20 Apr 2016

கிழக்கின் இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் க.பொ.த சாதரணதர மாணவர்களுக்கு இலவசக் கல்விக் கருத்தரங்கு.

SHARE
கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் (பிரதிப் பணிப்பாளர்,தேசியமொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) திட்டமிடலின் கீழ் நடைபெறும் இலவசக் கருத்தரங்கின்
இரண்டாம் தொடர் திங்கட்கிழமை (18) மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இக்கருத்தரங்கு புதன் கிழமையுடன்  (20) நிறைவு பெறுகின்றது.

இதன்போது வரலாறு, கணிதம், தமிழ் போன்ற பாடங்களுக்கான விரிவுரைகளும், விளங்கள்களும், இடம் பெற்றன.

இக்கருத்தரங்கில் படுவான்கரை பிரதேசத்தைசேர்ந்த 200 இற்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்

இவ் தொடர் கருத்தரங்கு பற்றி கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் கருத்து தெரிவிக்கையில்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது சமூகத்தின் கல்வி நிலையினை உயர்த்துவதன் மூலமே சகலவழிகளிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எமது சமூகத்தினை அனைத்து வழிகளிலும் முன்னேற்றமடையச் செய்யலாம். எனும் நோக்குடன் ஆசிரியர் வளம் குறைவாக உள்ள பிரதேசங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் கல்வியில் முன்னேற தடையாக உள்ள பிரதேசங்களை உள்ளடக்கியவாறு இக் கருத்தரங்கு எம்மால் திட்டமிடப்பட்டிருக்கின்றது. 

முதலாவது படிக்கல்லான சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்களை சிறந்தசித்தியினை பெறவைப்பதோடு சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதே எமதுகுறிக்கோள்.

எனவே மாணவர்கள் இச்சந்தர்ப்பத்தை சிறந்தமுறையில் பயன்படுத்தி கல்வியில் ஆர்வத்தினை அதிகரித்து பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 

கலாநிதி அப்துல்கலாம் அவர்கள் கூறியது போன்று நீங்கள் என்னவாக வரவிரும்புகின்றீர்கள், உங்களுடைய சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி கனவு காணுங்கள். கல்வியே எமக்கான அங்கீகாரத்தை சகல இடங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த வழி ஆகும்.

இதனை அனைத்து மாணவர்களும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்லாமல் எமதுகிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பில் எமது மாவட்டத்தின் சகல பிரதேசங்களையும், சேர்ந்த இளைஞர், யுவதிகள் உத்வேகத்துடன் செயற்பட்டு வருகின்றனர். எமது செயற்பாடுகள் கல்வியினோடு மட்டும் நின்று விடாமல் எமது சமூகத்தினை சுகாதாரம், விளையாட்டு, கலை, கலாச்சாரம்,  போன்ற சகலதுறைகளிலும் படியுயர்த்தும் நோக்கில் இயங்கிவருகின்றது. என அவர் தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: