24 Apr 2016

நாராயணன் தேவஸ்த்தானத்தின் களஞசியசாலை காட்டுயானையால் முற்றாக உடைத்து அழிப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள நாராயணன் தேவஸ்த்தானத்தின் களஞசியசாலையை காட்டுயானை முற்றாக உடைத்து அழித்துள்ளது. இச்சம்பவம் வெள்ளிக் கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக மேற்படி ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விடையம் குறித்து மேலும் தெரியவருவதாவது….

வெள்ளிக்கிழமை இரவு இவ்வாலயத்தினுள் பகுந்த காட்டுயானை ஆலயத்தின் களஞ்சியசாலையை முற்றாக உடைத்து அழித்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் துவஞ்ஞம் செய்துள்ளது. ஆலயத்திற்குச் சொந்தமான ஒலிபெருக்கி, மின் பிறப்பாக்கி இயந்திரம், மற்றும், இயத்திரனியல் உபகரணங்கள், அடங்கலாக ஆலய பவனைப் பெருட்களும் சேதமைந்துள்ளதாகவும், இவற்றால் சுமார் மூன்று இலட்டசம் ரூபாவுக்கு மேல் நஸ்ட்டம் ஏற்பட்டடுள்ளதகவும் நாராயணன் தேவஸ்த்தானத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ சிவம் குருக்கள் தெரிவித்தார்.

இந்நிலையில் இக்கிராமத்தில் 5 நபர்கள் காட்டு யானைகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் தாம் நிம்மதியாய உயிர்வாழ முடியாதுள்ளதாகவும் 35 ஆம் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எஸ்.காந்தன் தெரிவித்தார்.

தொடர் காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ள இப்பிரதேச மக்களின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் தீர்த்து வைக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்விடத்திற்கு சனிக்கிழமை (23) காலை விரைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா நிலமையினை பார்வையிட்டதுடன், காட்டுயானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்ததுடன், மக்களின் குடியிருப்புக்களை அண்டியுள்ள பகுதியில் தங்கிநிற்கும் காட்டு யானைகளை உடன் அப்புறப்படுத்த வேண்டும், அதுபோல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு உடன் வருவேன் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: