24 Sept 2015

முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று

SHARE
உலக முஸ்லிம்கள் அனைவரும் இன்று புனித ஹஜ் பெருநாளை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத்திருநாள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை ஊக்குவித்து, அதனைக் கொண்டாடும் வகையில் ஹஜ் பெருநாள் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பெருநாளின்  போது முஸ்லிம்கள் அளிக்கும் குர்பானி நன்கொடையும் ஏழை மக்களின் மகிழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடைகளில் ஒன்றாகும்.
முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு வழமைக்கு மாற்றாக இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: