22 Sept 2015

உள்ளுர் சமூக மேம்பாட்டிற்கு வலுவூட்டும் அமெரிக்க தூதரகம்.

SHARE
இலங்கை முழுவதிலும் இளைஞர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கான தீர்வுகளுக்காக பணியாற்றும் குழுக்களுக்கு நிதி வழங்கும், ஓர் புத்தாக்க வழிவகையான அமெரிக்கா தூதரகத்தின், வருடாந்த இளைஞர் வலுவூட்டல் உதவித் தொகை நிகழ்ச்சியின் அங்கமாக 16 சிவில் சமூக நிறுவனங்களுக்கு, 150000 அமெரிக்க டொலர்களை, ( அண்ணளவாக இலங்கை ரூபாயில் 21000 000) அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் திங்கட் திங்கட் கிழமை (21) வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது….

சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு உதவி புரிவதில், சிவில் மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின், முக்கியமான வகிபங்கினை வலியுறுத்தும்,     “ சிவில் சமூகத்திற்கான வெளி என்பதை முன்நிறுத்துவதாக இந்த வருடத்தின், ஜனநாயக தினம் அமைந்துள்ளது” என அமெரிக்கத் தூதுவர் அப்துல் கேஷப் அதில் குறிப்பிட்டுள்ளார். 

தமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு இளைஞர்கள தமது சக்தியையும், ஆக்கதினையும் பயன்படுத்துவதற்கு இலங்கை இளைஞர்களுக்கு உதவுவதில் அமெரிக்கா பெருமை கொள்கின்றது. 

நிபுணத்துவம் கொண்ட குழுவினரால் ஆழமாக ஆராயப்பட்ட பல பிரதேசங்களிலிலிருந்து சுற்றுச் சூழல், இளைஞர் அபிவிருத்தி, கலாசார பரிமாற்றங்கள், பால் நிலைசார் வன்முறைகள், மற்றும் கல்வி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தல் போன்ற மிக முக்கிய விடையங்கள் சார்ந்து உதவித் தொகை பெறுனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச்செயற்றிட்டங்கள், மொனறாகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, அனுராதபுரம், கொழும்பு, மாத்தறை, காலி, ஹொரண, அம்பாறை, யாழ்ப்பாணம், சீனிகம, தங்காலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கட்டுநாயக்கா, மற்றும் கொக்கல சுதந்திர வர்த்தக வலயம், ஆகிய 16 பிரதேசங்கள் இச்செயற்றிட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

தொடர்ந்து ஆறாவது வருடமாக அமெரிக்கத் தூதரகம், இளைஞர்களை வலுவூட்டும் உதவித் தொகை நிகழ்ச்சியினூடாக உதவிவருகின்றது. இதுவரையிலான காலப் பகுதியில் மொத்தம் 95 செஙற்றிட்டங்களுக்காக 852588 அமெரிக்க டொலர்களை, ( அண்ணளவாக இலங்கை ரூபாவில் 120 மில்லியன்) அமெரிக் தூதரகம், வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: