22 Sept 2015

நல்லாட்சியில் தமிழ் மக்களுகுரிய அனைத்து விடையங்களிலும் சமத்துவத்தையும் திருப்தியையும் தந்துவிட்டது. என கருதமுடியாது.

SHARE
தற்போதைய அரசினால் முன்நெடுக்கப்படுகின்ற நல்லாட்சியில் தமிழ் மக்களுகுரிய அனைத்து விடையங்களிலும் சமத்துவத்தையும், திருப்தியையும் தந்துவிட்டது. என கருதமுடியாது.  எனவே இந்த நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்குரிய அனைத்து தீர்வுகளும் கிடைக்க வேண்டும்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்காமலில்லை உடைந்துபோன் எமது மக்களின் செயற்பாடுகளை முன்நெடுப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக் கிழமை (20) கோட்டைக்கல்லாற்றில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தானர்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்குவாழ் எமது தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசியத்தை மீண்டும், நிலை நாட்டியுள்ளார்கள். 

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய வாக்குகளைவிட  இம்முறை கிடைக்கப் பெற்ற வாக்குள் இரட்டிப்பாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. இது என்னாலோ அல்லது தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்களாலோ மாத்திரமல்ல, எமது கட்சியில் போட்டியிட்டியிட்ட 8 உறுப்பினர்களாலும்தான் இந்த வாக்கு வங்கி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தேர்தலில் போட்டியிட்ட 8 உறுப்பினர்களும் பாராட்டப்பட வேண்டும்

இருந்த போதிலும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய இடங்களில் மேலும் ஒவ்வாரு ஆசனங்கள் கிடைக்கப் பெறவிருந்த போதிலும் அவை தவறவிடப்பெட்டுள்ளன. எமது மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தால் எமது தலைவர் சம்மந்தன் கூறியது போன்று 20 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பெற்றிருக்கலாம்.

எனவே எதிர் காலத்தில் நடைபெறவுள்ள எந்த தேர்தலாக இருந்தாலும் தமிழ் மக்கள் அனவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம்தான் வாக்களிக்க வேண்டும்.  

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணைகள் முன்நெடுக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பிரதேசங்களில் அபிவிருத்திகள் மன்நெடுக்கப்பட வேண்டும், போன்ற பல எதிர் பார்ப்புகளுடன் தற்போதைய காலகட்டத்தில் எமது மக்கள் உள்ளார்கள். இப்படியான பல விடையங்களுக்கு மத்தியில், இராஜதந்திர செயற்பாடுகளை எமது தலைமை முன்நெடுத்துச் செல்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தையும் கடந்து சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வந்ந கடுமையான பிரயத்தனத்தின் பிரதிபலிப்புத்தான் கடந்த 16 ஆம் திகதி ஐ.நாவால் வெளிவந்துள்ள அறிக்கையாகும்.  இந்த அறிக்கை தமிழ் மக்களுக்கு முழுமையான திருப்பதியைத் தராவிட்டாலும், ஓரளவு  வெற்றி கண்டுள்ளோம். என்கின்ற திருத்தியுள்ளது. இது பூரணத்துவமான திருப்தி கிடைக்க வேண்டுமாகவிருந்தால் உள்ளக விசாரணைக்குள் முடிங்கிவிடாமல் சர்வதேச விசாரணை பொறிமுறையை எதிர்பார்திருக்கின்றோம்.

தற்போதைய அரசினால் முன்நெடுக்கப்படுகின்ற நல்லாட்சியில் தமிழ் மக்களுகுரிய அனைத்து விடையங்களிலும் சமத்துவத்தையும் திருப்தியையும் தந்துவிட்டது என கருத முடியாது.  எனவே இந்த நல்லாட்சி அரசில் தமிழ் மக்களு;குரிய அனைத்து தீர்வுகளும் கிடைக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் அபிவிருத்திபற்றிச் சிந்திக்காமலில்லை உடைந்துபோன் எமது மக்களின் செயற்பாடுகளை முன்நெடுப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

எனவே சிறுபான்மை பலத்தினால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம் வெறுமனே கால இழுத்தடிப்புக்களைக் கொண்டு செல்லாமல் உடனடியாக எமது மக்களுக்குரிய தீரிவினை முன்வைக்க வேணடும், குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன்ன நிறுத்தப்பட வேண்டும். உருவாக்கப்பட விருக்கின்ற கலப்பு நீதிமன்றத்தினால், தமிழ் மக்களுக்குரிய முறையான தீர்வு வேண்டும். என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: