8 Aug 2015

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

SHARE
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு ஏற்பட்ட நிலமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஏற்படாமல் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

 திகாமடுல்ல மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அட்டாளைச்சேனை தைக்கா நகரில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பதன் ஊடாக நமது 03 முஸ்லிம் எம்.பிக்களைப் பெறலாம் என கோரிக்கை விடுத்தார்.

அன்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் வேண்டுகோளை புறக்கணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் அரசியல் வாதிகள், அஸ்ரப் சொல்வது தவறான தகவல் எனவும்இ  நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களாக யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். நாங்கள் எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோம்.  அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஒவ்வொரு ஊர்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் தெரிவித்தார்கள்.

 அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்களார்கள் சுமார் 33ஆயிரம் பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களித்தனர். திகாமடுல்ல தேர்தல் முடிவுகளின் படி அம்பாறை தொகுதியில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பி. தயாரத்ன, கலபதி, ஏ.பக்மீம ஆகியோர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட வரலாற்றை அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் என்றும் மறந்து விட முடியாது. 

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் தேசியக் காங்கிரஸின் சார்பில் 03 முஸ்லிம் வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடுகின்றனர்;. இவர்களுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மூன்றையும் இலகுவில் பெறக் கூடிய வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது என்றார். 
SHARE

Author: verified_user

0 Comments: