பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட
கொண்டுவரவுள்ள புதிய சட்டங்களை எதிர்த்து உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்த்து பிரேசணை
நிறைவேற்ற வேண்டும்.
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்னிரண்டு உள்ளுராட்சி சபைகள் இருக்கின்றன. இந்த உள்ளூராட்சி சபைகளில் ஒன்பது உள்ளுராட்சி சபைகள் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், மூன்று உள்ளூராட்சி சபைகள் எங்களுடைய சகோதர முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றதாக இருக்கின்றன.
எங்களை பொறுத்தவரையில் இந்தத் தமிழ் பேசுகின்றவர்கள் என்ற அடிப்படையிலுதடஈ பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், எங்களுடைய ஒன்பது பிரதேச சபைகள் மற்றும் மூன்று எங்களுடைய முஸ்லிம் மக்களைப் பிலதிநிதித்துவப் படுத்துகின்ற சபைகளும் இணைந்து கூடாக அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்குன்ற சட்டம், மற்றும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டம், ஆக்கியவற்றுக்கு திராக எதிர்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தெழிவுபடுத்தும் விழிப்புணர்வு நிழ்வு இன்று சனிக்கிழமை(07.11.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்திற்குச் சார்பாக எந்த ஒரு பிரதேச சபையும் ஆட்சி நடைபெறவில்லை. ஆகவே அதனை எதிர்க்கக்கூடிய சபைகள்தான் மட்டக்களப்பிலுள்ள பன்னிரண்டு சபைகளுமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
அந்த அடிப்படையில் நாங்கள் நேர்கணியமாகச் சிந்தித்து இந்த விடயத்தை நாங்கள் எதிர்மறையான இந்தச் சட்டத்தை எதிர்க்கின்ற செயல்பாட்டை நிற்சயமாக உள்ளுராட்சி மன்றங்கள் நிறைவேற்ற வேண்டும்.
ஊடக சந்திப்புகள் மற்றும் எதிர்ப்பு செயல்பாடுகள் மூலமாக இந்தச் சட்டத்திற்கு எதிராக மக்களின் உணர்வுகளை நாங்கள் நிச்சயமாக தூண்டச் செய்வோம், மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்வோம்.
கடந்த காலத்தில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக அரச பயங்கரவாதம் அதிகமாக நடைபெற்றன. இந்த அரசாங்கம் நுட்பமாக அல்லது தந்திரோபாயமாக விடயங்களை செய்து கொண்டிருக்கின்றது.
நல்ல சட்டங்களை, சட்டமூலங்களை கொண்டு வருகின்ற அதே வேளையில் தமது நலன் பெறக்கூடிய இந்த அரசைப் பாதுகாக்குன்ற பயங்கரவாதத்திற்கு பாதுகாக்குன்ற சட்டத்தையும் கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே இதுபற்றிய தெளிவு எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. நாங்கள் இந்த இடத்தில் நிச்சயமாக இந்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்வினைகளையும், மக்கள் செயல்பாடுகளையும், மக்களின் எதிர்ப்புகளையும் செய்யக்கூடிய விதத்தில் நிச்சயமாக செயல்படுவோம்.
வெளிநாட்டுத் தூதரகங்களுக்குக்கூட இந்த விடயங்களைக் கொண்டு சென்று அவர்களுக்கு நாங்கள் அந்த ராஜதந்திரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அதனையும் நாங்கள் செய்வோம். பாராளுமன்ற மட்டத்திலும் சரி, உள்ளுராட்சி சபை மட்டத்திலும்சரி அல்லது ஊடகங்கள் மத்தியிலும்சரி, அடுத்ததாக இராஜதந்திர மட்டங்களிலும்சரி, சர்வதேச ரீதியாகவும், இலங்கைக்கு உதவி அளிக்கின்றவர்கள் வருகின்ற போதும்கூட நாங்கள் நிச்சயமாக இந்த விடயம் தொடர்பில் ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கப்போகின்றது என்பது தொடர்பில் தெரிவிப்போம்.
இந்த அரசாங்கம் தனது எதிர்கால நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றப்போகின்றது என்பதற்கு ஒரு கட்டியம் கூறுவதாக இந்தச் சட்டம் இருக்கின்ற விடயத்தையும் நாங்கள் நிச்சயமாக சொல்லுவோம்.
இந்த விடையத்தை ஊடகவியலாளர்கள் உள்ளுராட்சி சபைகளுக்குக் கொண்டு செல்ல
வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment