1 Nov 2026

மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த காணி மத்தியஸ்தர்களுக்கான 6 நாள் விசேட பயிற்சிச் செயலமர்வு..

SHARE


மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த காணி மத்தியஸ்தர்களுக்கான 6 நாள் விசேட பயிற்சிச் செயலமர்வு..2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க விசேட வகைப் பிணக்குகள் மத்தியஸ்தச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நர்களுக்கான 6 நாள் விசேட பயிற்சி நெறி 2026.10.26 ஆம் திகதியிலிருந்து 2026.10.31 ஆம் திகதி வரையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளன.

இதன்போது காணிஉரிமை, மற்றும் உடமை தொடர்பான பிணக்குகளைக் கையாள்வதற்கான நடைமுறைகள், மத்தியஸ்த நுட்பங்கள், முரண்பாட்டுப் பகுப்பாய்வு சட்ட ஏற்பாடுகள், மற்றும் மத்தியஸ்தர்கள் அறிந்திருக்க வேண்டிய விசேட நடைமுறைகள், குறித்து மத்தியஸ்த பயிற்சி வளவாளர்களான எம்.ஐ.எம்.ஆசாத், மற்றும் எஸ்.விமலராஜா ஆரியோர் பயிற்சிகள் வழங்கப்பட்டன.  

காணி மத்தியஸ்தராகத் தகைமை பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இப்பயிலுநர்கள் 6 நாட்களிலும் முழுமையாகக் கலந்து கொண்டதுடன், இறுதிநாளான சனிக்கிழமை அவர்கக்கான பரீட்சையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு நிலை கிழக்கு மாகாண காணி ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த சபையின் காணி விசேட தவிசாளருமான கே.குருநாதன், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: