மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு.
உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், ஓய்வு நிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், சிவஸ்ரீ சி.குகநாத ஐயர், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சமூகத்திற்காக தம்மை அற்பணித்து சேவையாற்றி வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை அதிபர் சா.மதிசுதன், கதிரவன் பட்டிமன்ற பேரவையின் தலைவர் த.இன்பராசா, உலக நண்பர்கள் செயற்றிட்டப் பணிப்பாளர் சாந்தகுமார், ஆகிய 4 பேர் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இதன்போது ஊடகம், கல்வி, கலை, விவசாயம், என பல துறைகளில் சேவையாற்றிவரும் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆண்களின் மன
நல ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டிலா? பணியிடத்திலா?
எனும் தொணிப்பொருளில் பட்டிமன்றமும், இடம்பெற்றது.




.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)


.jpeg)


.jpeg)

0 Comments:
Post a Comment