மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு நிறைவு விழர் ஆறு நாட்கள்
சிறப்பு நிகழ்வுகள்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நிறைவு விழா நினைவுச் சின்னமாக சுவாமி விவேகானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை மிகவும் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பல்வேறு ஆன்மீக, கல்வி மற்றும் சமூகப் பண்பாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பில் கடந்த 12 திகதி முதல் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக கல்வி, ஆன்மீகம், சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகளில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.
இந்நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் உபதலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, நவம்பர் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
இதன் ஒரு பகுதியாக நவம்பர் 12ஆம்
திகதி பக்தர்கள், குருகுலப்
பழைய மாணவர்கள், ஆலய
அறங்காவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத்
சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ்ஜிற்கான வரவேற்பு இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை(14.11.202) இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் விசேட பூஜைகள், வேத பாராயணம், கொடியேற்றம், பஜனை என்பன மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையில் நிகழ்த்தப்பட்டு, நூற்றாண்டு நினைவுச் சின்னம் உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் உபதலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவுகள் என்பன மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஒரு நூற்றாண்டு காலமாக மட்டக்களப்பு மண்ணில் ஆன்மீகத்தையும் கல்வியையும் சமூக சேவையையும் முன்னெடுத்து வரும் இராமகிருஷ்ண மிஷனின் இந்த நூற்றாண்டு நிறைவு விழா, கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வுகளில் ராமகிருஷ்ண மிஷன் துறவிகள், பக்தர்கள், இல்ல மாணவர்கள், பொது நிலையினர் என்று பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment