போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக்
குழுக் கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை(01.10.2026) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலானர் சோ.ரங்கநாதனின் ஒருங்கிணைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினனருமான கந்தசாமி பிரபுவின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மற்றும் திணைக்களத் தலைவர்கள், அதிகார சபைகளின் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடடர்பில் விரிவாக
ஆராயப்பட்டதுடன், விவசாயம், கல்வி, சுகாதாரம், காட்டுயானைகளினால் ஏற்படும் பிரச்சனைகள்,
போக்குவரத்து, எதிர் வரும் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பான விடையங்கள் என
பல்வேறு விடைங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment