6 May 2026

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி.

SHARE

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி. 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் செவ்வாய்கிழமை (05.05.2026) இடம்பெற்றது. 

தமிழ்பாட இணைப்பாளர் பு.சதீஷ்குமாரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இப்போட்டியில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று, கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினர். 

போட்டி நிறைவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டனர்.

ஆரம்ப நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.க.சுபாகரன், திருமதி தே.உதயகரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.சக்திதாஸ், சி.தீபதர்சன், மூ.உதயகுமாரன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: