3 May 2026

சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள கைப்பற்றப்பட்டன.

SHARE

சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் விற்பனைக்காக   கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்வதற்கு பழுதடைந்த நிலையிலும், உரிய வெப்ப நிலையை முறையாகப் பேணாமலும், சுகாதாரத்திற்கு முறைகேடான களஞ்சியம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை குடிபானங்கள் களுவாசிகுடி பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாராத பரிசோதகர் த.கஜனனினால் நேற்றயத்தினம் சனிக்கிழமை(02.05.2026) கைப்பற்றப்பட்டன.

இதன்போது 448 ஒருவகை யோக்கட்களும், 143 யோக்கட் பானங்களும், கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டன. 

இந்நிலையில் இப்பானங்களை களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்வதற்காக கொண்டு சென்ற நபருக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.







SHARE

Author: verified_user

0 Comments: