7 Apr 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

SHARE

மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும் தற்போது  கருகிய நிலையில் காணப்படுகின்றன.

தென்னை மரத்தின் குரும்பட்டிகளும் தற்போது கருகி வருவதை காண முடிகின்றது. இதேவேளை பொதுமக்கள் நீர்நிலை மற்றும் நிழல் பகுதிகளை அதிகம் நாடிச் செல்கின்றனர். 

தொடர்ச்சியான வெப்பநிலை காரணமாக சிறியவர்கள் வயோதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் நண்பகல் வேளை  மட்டக்களப்பு நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதையும் காணமுடிகின்றது.

















SHARE

Author: verified_user

0 Comments: