8 Apr 2026

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

SHARE

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை. முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டு துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காண முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கிராம கிரிக்கெட் மைதானத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ்  முதல் முறையாக இலங்கைக்கு  விஜயம் ஒன்றை செவ்வாய்கிழமை(07.04.2026)  மேற்கொண்டுள்ளார். 

அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக  சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு இலங்கையில் முதல் தடவையாக 3 கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை இரண்டு வார காலம் மைதானத்தில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார். 

எதிர்வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இவ்விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் வட கிழக்கு மாகாணத்தில் பிரதேச இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக  மாற்றுவதற்கும் தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும்  பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. 

இதன் போது கருத்து தெரிவித்த பிரட் வப்டிஸ் சர்வதேச தரத்தில் இம்மைதானம் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் எதிர்காலத்தில் வரவாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

அண்மையில் வேகப்பந்து வீச்சார்களை இனங்காணும் செயல்பட்டறை   முன்னெடுக்கப்பட்டிருந்தது அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வீரர் தெரிவு செய்யப்பட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




 

SHARE

Author: verified_user

0 Comments: