8 Apr 2026

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

SHARE

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பின்னணியிலிருந்து சாதனை படைத்து, மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவன் பசிதரன் சர்ஜன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்தை மரியாதை நிமிர்த்தம் பாராளுமன்ற உறுப்பினரது மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை(06.04.2026) சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த பசிதரன் சர்ஜன், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தந்தை இல்லாத நிலையில், தாயாரின் அரவணைப்பில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று தற்போது மருத்துவப் படிப்பிற்குத் தெரிவாகியுள்ளார். 

இச்சந்திப்பின் போது, மாணவன் தனது எதிர்கால பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடினார். 

ஒரு வைத்தியர் என்ற ரீதியில், பாராளுமன்ற உறுப்பினர் தனது மருத்துவக் கல்லூரி கால அனுபவங்களை மாணவருடன் பகிர்ந்து கொண்டார். 

மருத்துவப் பட்டப்படிப்பின்போது எதிர்நோக்க வேண்டிய சவால்கள் மற்றும் பாடப்பரப்புகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மாணவனுக்கு வழங்கினார். 

மாணவனின் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு, அவரது உயர்கல்வி தடைப்படாமல் தொடர்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக தனது முழுமையான பங்களிப்பை வழங்குவேன் என்றும் குறிப்பாக, மட்டக்களப்பு “தாயக ஊற்று" அமைப்பின் ஊடாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தன்னார்வலர்களின் நிதி உதவிகளைப் பெற்றுத்தந்து, இவரது பட்டப்படிப்பு சிறப்பாக அமைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பெண் தலைமை தாங்கும் குடும்பத்திலிருந்து உருவாகியுள்ள இந்த இளம் சாதனையாளரின் கல்வி முயற்சிக்கு பல தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: