27 Mar 2026

கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் போக்குவரத்து பொலிசாரின் தேடுதலின் போது சடலமாக மீட்பு.

SHARE

கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர்  போக்குவரத்து பொலிசாரின் தேடுதலின் போது சடலமாக மீட்பு.

இன்று வியாழக்கிழமை(26.03.2026) நண்பகல் மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாலத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாருக்கு அவ்வீதியால் பயணித்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் மீன்படியில் ஈடுபட்டிருந்த  மீனவர்களின் உதவியுடன்  குறித்த நபர் சடலமாக வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மீட்கப்பட்டுள்ளார். 

இதன்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிளும் கல்லடி பாலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது 

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது,  இடம்பெற்ற இச்சம்பவம் சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




 

SHARE

Author: verified_user

0 Comments: