15 Feb 2026

சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் இடம் பெற்ற வழிபாடுகள்

SHARE

சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் இடம் பெற்ற வழிபாடுகள்.

சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி திணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(15.02.2026) கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும் ஆலயங்களில் கிழக்கு மாகாணத்தில் சிறப்பு பெற்ற ஆலயத்தில் பொதுமக்களால் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் இடம்பெற்றமை விசேடாம்சமாகும்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அடியார்கள் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற இங்குள்ள கொன்றை மரத்தில்  நேத்தி கடன்களை கட்டி வழிபடும் ஆலயமாக இது சிறப்பு பெற்றுள்ளது.

தேவார பாராயணங்கள் மூலம் வழிபாடுகள் இடம்பெறும் ஆலயத்தில் அடியார்களின் பூஜை பொருட்களை வைத்தே இங்கு வழிபாடுகள் ஆகம முறைப்படி இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர்  ஆலய பிரதம குரு தம்பிப்பிள்ளை தவராஜா தலைமையில் சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் வழிபாடு செய்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: