3 Dec 2025

வெள்ளத்தினால் பாதிப்புற்ற ஆனைகட்டியவெளி பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயம்.

SHARE

வெள்ளத்தினால் பாதிப்புற்ற ஆனைகட்டியவெளி பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயம்.

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி பிரதான வீதி உடைப்பெடுத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொணாகல்ல பகுதியிலிருந்து வெளியேறும் நீர் ஆனைகட்டியவெளி, வேத்துச்சேனைப் பிரதேசங்களினூடாக வெளியேறிச் செல்வதனால் அவ்வீதி உடைப்பெடுத்ததையடுத்து அவ்வீதியுடனான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.  

இவ்விடயம் குறித்து அறிந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அப்பகுதிக்கு இன்றயத்தினம்(புதன்கிழமை(03.12.2025) விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார். 

அங்கிருந்தபடியே பாராளுமன்ற உறுப்பினர் வீதி அபிவிருத்தி மாட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த வீதியின் புனரமைப்பு தொடர்பில் எடுத்துரைத்ததற்கு இணங்க இவ்வீதி புனரமைப்பு நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு நிலவரைம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடமும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.











 

SHARE

Author: verified_user

0 Comments: