நாகர் வேட்டை உதைப்பந்தாட்ட சமர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி நாகர் விளையாட்டு கழகம் 55 வது ஆண்டு முன்னிட்டு நடாத்திய நாகர் வேட்டை உதைப்பந்தாட்ட சமர் 2025 ஐ முனைக்காடு இராமகிருஷ்ண விளையாட்டு கழகம் கைப்பற்றி முதலாம் இடத்தை தனதாக்கி கொண்டுள்ளது.
நாகர் வேட்டை 2025 சமர் கழக தலைவர் கேதீஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) பண்டாரியாவெளி நாகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபைதவிசாளர் இ.கிரேஸ்குமார் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விளையாட்டுப் போட்டியில் மொத்தமாக 20 அணிகளுக்கு மேல் பங்கு பற்றியிருந்தன. இச்சுற்றுப் தொடர் கடந்த 04 ஆம் திகதி ஆரம்பமாகி ஞாயிற்றக்கிழமை நிறைவு பெற்றிருந்தது.
இதன் போது இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராம கிருஸ்ணா அணி மற்றும் காஞ்சிரங்குடா நாக ஒளி விளையாட்டு கழகம் மோதி 03 க்கு 01 எனும் கணக்கில் முனைக்காடு இராம கிருஸ்ணா அணி வெற்றிவாகை சூடியது.
இதன் போது வெற்றிபெற்ற அணிகளுக்கு கேடயங்களும், பணப்பரிசில்களும், வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment