அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்த குருக்கள்
மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நடந்த ஆசிரியர் தின நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை(13.10.2025) ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குருக்கள்மடம் கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் அதிபர், ஆசிரியர்கள், மலர் மாலை அணிவித்து, பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.
இதன்போது ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து பல்வேறு கிராமிய விளையாட்டு நிகழ்வுகளில் பற்கேற்றிருந்தனர். மேலும் ஆசிரியர் தின கீதம் பாடப்பட்டு ஆசிரியர்களின் பல்வேறு கண் கவர் நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.
0 Comments:
Post a Comment