பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் களுவாஞ்சிக்குடி
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற விருக்கும்
மாணவர்களுக்கான பொதுச் சாதாரண பரீட்சை பாடத்திற்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
11.09.2025 திகதி இன்று பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது.வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில்
நடைபெற்ற இக் கருத்தரங்கில் வளவாளராக இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த தெய்யத்தகண்டிய
பிரதேச செயலாளர் செ.பார்த்தீபன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பழைய மாணவர் சங்க செயலாளர்
ச.அனோஜன், சங்கத்தின் சட்ட ஆலேசகர் சட்டத்தரணி ர.ரமணா, பொருளாளர் ஹரிபிரசன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
இவ் இலவச கருத்தரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட
மாணவர்கள் கலந்து கெண்டிருந்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும்
இலவசமாக கையேடுகள் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment