18 Sept 2025

என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன் - தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவிப்பு.

SHARE

என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன் - தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் தமது காரியாலயங்களை வைத்திருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வியாபார சான்றிதழைப் பெறாததனால், அந்நிதி நிறுவனங்கள் அனைத்தையும் தீடீரென பூட்டப்படுவதாகத் தெரிவித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அதிரடி நடவடிக்கை அந்நிறுவனங்களை (18.09.2025) இன்றயதினம் மாலை மூடவைத்துள்ளளார். 

வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டியை வீதத்தை மக்களிடமிருந்து வசூலிக்கும் நிதி நிறுவனங்கள், என்பன இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அதிரடியாக பூட்டப்பட்டன. 

அண்iமியல்; இரு தடவைகள் பிரதேச சபைத் தவிசாளருக்கும், இந்நிதி நிறுவனறங்களுக்குமிடையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வைத்து நுண் நிதிக் கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் வியாபார சான்றிதழ் மற்றும், அதிகூடிய வீதத்தை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் பூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தனர். அதக்கிணங்க இன்றயதினம் மாலை தவிசாளரினால் நேரடியாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நிலையில் என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்கமாட்டேன், மக்களுக்கு அதிக வட்டி வீதத்ததை வசூலிக்கும் நிதி நிறுவனங்களையும், எமது பிரதேச சபையில் வியாபாரச் சாண்றிதழ் பெறாத அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும் என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: