30 Apr 2025

பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.

SHARE

பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திலிருந்து முதன்முறையாக பொறியியலாளராக தெரிவுசெய்யப்பட்ட மாணவி மற்றும் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடமும் 13 ஆம் இடமும் பெற்ற மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு. புதன்கிழமை(30.04.2025) அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இதன்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சிறப்புச் சாதனை புரிந்து, மட்.மமே. அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், அவர்களுக்கு கல்வி வழங்கிய ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். 

பாடசாலையின் அதிபர் க.அரசரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும்  பொதுச் சமூக அமைப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களையும், ஆசரிகர்களையும் வாழ்த்திப் பாராட்டினர்.













SHARE

Author: verified_user

0 Comments: