7 Apr 2025

மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக கலாபூசணம் மா.திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

SHARE
மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக  கலாபூசணம் மா.திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபைக் கூட்டத்தில் அதன் தலைவராக கலாபூசணம் மா.திருநாவுக்கரசு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் வீரகேசரி நிருபராக சமூக நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய திருநாவுக்கரசு தனது துறைபோர்ந்த பணிக்கு கூட்டுறவுத் துறையை சிறப்பெனத் தேர்ந்தெடுத்து அத்துறையில் வங்கி சேவைகள் முகாமையாளராகவும், மற்றும், பொது முகாமையாளராக 36 வருடங்களும் பணிப்பாளர் சபை உறுப்பினராக 13 வருடங்களுமாக மொத்தமாக 49 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி சமூக நடவடிக்கைகளில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர். 

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் ஸ்ரீ இராமகிருஸன மிசன் துறவிகளின் ஆன்மீக பாசறையில் வளர்ந்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீகப் பாதையில் அடிஎடுத்து வைத்த இவர் தமிழரசு கட்சியின் தலைவர் அமரர் சி.மூ. இராசமாணிக்கத்தின் மன வெளிப்பாடுகளுள்ளும்  மதிப்புற்று வாழலானார்.  

இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் நட்பும் இறுக்கமான உறவும் இயல் தமிழ் வளர்ச்சிக்கு இவரை இட்டுச் சென்றது. இவர் மரபு ரீதியாக கவிதை எழுதத் தொடங்கினார். இவரது எழுத்துக்கு அழகு சேர்பப்து இவர் வெளியிட்ட “மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள்மடம் எனும் பேரூர்" நூலேயாகும். பாடசாலைக் காலங்களிலும் பதவிக்காலங்களிலும் பல மேடைகளில் சொற்பெருக்காற்றி தங்கப் பதக்கஙக்ள் பல பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிகையில் அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட கௌரி அமைப்பு தமிழ் வளவன், குருபூரான், பேரூரான், எனும் விருதுகளை வழங்கி கௌரவித்தது. 
இது தவிர அகில இலங்கை சமாதான நீதவான்கள் சங்கம் தேசகீர்த்தி, கீர்த்திஸ்ரீ, சமூக மேம்பாட்டாளன் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. 

இது தவிர இலங்கைஅரசு கலாபூசணம், பல்துறை வித்தகர், சமாதானத்துக்கான தூதுவர், கலைஞர் சுவதம், அகில இலங்கை சமாதான நீதவான் என்கின்ற விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. அரச இணக்கசபையின் நிகழ்வுகளில் பங்காளராக இருந்து முழுமையான பணியை செலுத்தி ஜனாதிபதியின் விருதையும் பெற்றறுள்ளார். 

சமய சமூக நிறுவனங்களின் அளப்பெரிய பங்காற்றலும் ஊடகத்துறையில் சிறந்த அனுபவமும் தமிழ் இலக்கிய அரங்குகளில் கலந்து சிறப்பித்த ஆளுமையும் இவரது தனித்துவத்தை காட்டி நிற்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூகநிலை சார்ந்த விடயங்களில் அதி முக்ககியஸ்தராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். நகைச்சுவை ததும்ப பேசும் இவர் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி பாராட்டப்பட்டவர். இவர் சமூக அமைப்பின் மாண்பியலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவராகவும் காணப்படுகின்றார்.  
 


SHARE

Author: verified_user

0 Comments: