பிள்ளையானால் எனக்கு தொடற்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன – காணி சீர்திருத்த ஆணைக்குருவின் மட்டு.மாவட்ட பணிப்பாளர்.
முன்னர் பதவி வைகித்த அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சராகவும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், சிவனேசதுரை சந்திரகாந்தன் இருந்து கொண்டு எனக்கு அவருக்குரிய சிறப்புரிமையையும் பாவித்து பாராளுமன்றத்திற்குள்ளும் அவருக்கு இருக்கின்ற அரசியல் செல்வாக்கை பாவித்து பாராளுமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ச்சியாக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன.
என காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிவனேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவர் களுவாஞ்விகுடி நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை(10.01.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான் அவ்வப்போது பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்திருந்தேன். குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பாக அதாவது என்னை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், அவ்வாறு செல்லாது இருந்தால் அங்கு போவேன், இங்கு போவேன், என கூறினால் இது கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் இதில் என்ன நடக்கும் என தெரியும்தானே. நான் உன்னை கௌரவமாக அனுப்ப வேண்டும் என நினைக்கின்றேன் இல்லையேல் நீ அவமானப்பட்டு போக வேண்டி வரும் என என்னை அவர் எச்சரித்து அச்சுறுத்தி இருந்தார்.
அது மாத்திரமன்றி அவருடன் சேர்ந்த இன்னும் இருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய செயற்பாடுகளுக்கு என்னை ஒத்துப் போகுமாறும் இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும் எனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். அது தொடர்பான ஒலி பதிவுகள் அனைத்தும் நான் பொலிசாருக்கு ஒப்படைத்து இருக்கின்றேன். இந்த வழக்குத் தொடர்பில் பொலிசாரினால் எனக்கு கடிதம் தரப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்திலேயே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை பொலிசார் தொடர்பு கொள்வதாகவும் ஆனால் அவர் வாக்குமூலம் வழங்குவதற்கு முடியாமல் இருப்பதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்திலேயே அறிக்கிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை என்பதை அவர்கள் அப்போது குறிப்பிட்டிருக்க வில்லை நான் என்னுடைய தனிப்பட்ட சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்திலே சமர்ப்பணம் செய்யப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர் இரண்டு நோட்டீஸ்கள் வரவில்லை என தெரிவித்திருந்தார். பின்னர் அவருடைய காரியாலயத்தின் கதவினிலே ஒரு நோட்டீஸ் கொட்டப்பட்டது.
இந்நிலையில்தான் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவரினால் எனக்கு குறிப்பிடப்படுகின்ற விடயம் என்னவெனில் அவருடைய காலப்பகுதியில் அவருடைய செயற்பாடுகளுக்கு நான் துணை போகவில்லை, என்பதற்காக அவர் என்னை திட்டமிட்டு பல அச்சுறுத்தல்களை விட்டிருந்தார். அந்த அச்சுறுத்தலின் விளைவாக அரச உத்தியோகத்தர் ஆகிய நான் நிற்கதிக்கு உள்ளாக்கப்பட்டு , ஏற்கனவே நான் அரச கடமையில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டிற்கும் உள்ளாக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னர் எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பாதுகாப்பைகூட மீளப்படுவதற்கு இவருடன் சேர்ந்த இன்னும் சிலர் ஒன்று சேர்ந்து பிழையான அறிக்கைகளை அறிவித்து என்னுடைய பாதுகாப்புகளை நீக்குவதற்காக செயற்பட்டிருந்தார்கள். அதற்காகவும் நான் உயர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கின்றேன்.
அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே இவருடைய பதவிக்காலத்திலே அரசாங்க கடமையை மேற்கொள்வது என்பது ஒரு பெரியதொரு துரற்பாக்கிய நிலைமையாகவே இருந்தது. இதனை அனைவரும் அறிவார்கள் குறிப்பாக அவர் சில இடங்களிலே குறிப்பிடுகின்றார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு, தனவந்தர்களுக்கும், நான் காணி கொடுத்ததாகவும்; தெரிவித்து வருகின்றார். காணி மோசடியிலே நான் ஈடுபட்டிருந்தால் பொலிசார் காணப்படுகின்றார், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு காணப்படுகிறது, இவ்வாறான இடங்களில் இன்றுவரையில் எனக்கு எதிராக நான் மோசடியாக செயற்பட்டனோ காணியை விற்பனை செய்தேனோ, மோசடியாக கையாழ்;கை செய்தேனோ, என எந்த விதமான விசாரணைகளோ வழக்குகளோ யாரும் தாக்கல் செய்யவில்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment