மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற வெள்ள நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.
மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது இன்னும் நாம் தயார்படுத்தலுடன் இருந்திருக்கலாம். அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைசாரத அபிவிருத்தித் திட்ட பணிகள் முன்னெடுத்தமையினால் அதிக வெள்ளப்பெருக்கு அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டி இருந்த ஒரு முக்கிய காரணியாக அமைந்து காணப்பட்டுள்ளது. இதற்கு இதற்கான தீர்வுகளையும் எதிர்காலத்தில் காணவேண்டி கட்டாயத்தில் இருக்கின்றோம்.
என மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலமை உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (02.12.2021) புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போது பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான மாவட்ட பிரதிநிதிகள் ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளின் பெயரில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் அதனை வெற்றிகரமாக முகம் கொடுப்பது சம்பந்தமாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் விசேட முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அபிவிருத்தி குழு தலைவரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் மாவட்டத்திலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தின் சகல அரச திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக இடம்பெயருவது சம்பந்தமாகவும், அவர்களுக்குரிய நிவாரண பொருட்கள் வழங்குவது சம்பந்தமாகவும், சுத்தமான குடிநீர் வழங்குவது, சுகாதார சேவைகளை முன்னெடுப்பது, பாதிக்கப்பட்ட விவசாய செய்கைகளுக்குரிய நிவாரணம் வழங்குவது, மீனவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது சம்பந்தமாகவும், இடர் அனர்த்தங்களின் போது பொதுமக்களை காப்பதற்கு மேலதிக கடற்படையினரை ஈடுபடுத்துவது சம்பந்தமாகவும், இந்த விசேட கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரிடம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டம் தொடர்பான கைநூலும் அரசாங்க அதிபரினால் இதன்போது கையளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத
மண் அகழ்வு, சம்பந்தமாக உயர் அதிகாரிகளுடன்
கலந்துரையாடி இதற்கான தீர்வுகளை கண்டுள்ளோம். விதிமுறைகளுக்கு முரணான சட்ட விரோதமான
மண் அகழ்வுகள் இடம்பெற்றால் நீங்கள் அதற்கு முறைப்பாடு செய்யலாம் .எதிர்வரும் காலங்களில்
மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்தி திட்டங்கள் மக்களை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட
வேண்டிய தேவை உள்ளது. என மாவட்ட புதிய அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான
அருண் ஹேமச்சந்திரா இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment