மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் 2700 குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொதிகள் 2700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து ஞாயிற்றுக் கிழமை(29.12.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளஇடரினால் பாதிக்கப்பட்ட மண்டூர் பிரதேச மக்களுக்கு இந்த நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு போரதீவுபற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கதான் அவகர்ளின் மேற்பார்வையின் கிழ் மண்டூர் -1, மண்டூர் - 2, மண்டூர் - 3, மண்டூர் தெற்கு, கோட்டமுனை, பாலமுனை, தம்பலவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 2700 குடும்பங்களுக்கு 90 இலட்சம் நிதி பெறுமதியான உலர் உணவு நிவாரண பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மண்டூர் பிரதேசம் முழுவதும் மிக மோசமான நிலையில் பாதிக்கக்கப்பட்டிருந்தது. அதில் அப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட் 2700 குடும்பங்களுக்கே இந்த உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment