கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து செவ்வாய்கிழமை(29.10.2024) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றன.
களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அப்பகுதி கடற்றொழிலாழர்கள் அவதானித்துள்ளனர்.
சிறிய அவளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடற்கரையில் இறந்து கிடக்கின்றன.
இது ஊம்பல் மீனினமாகும், காலத்திற்குக் காலம் இம்மீனினம் கரை ஒதுங்குவதுண்டு இந்த மீனினம் உண்பதில்லை இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment