இலங்கையில் புதிய வரலாற்றை படைக்கும் விசேட நடைப் பயணம்.
பேருவளையை சேர்ந்த ஸஹ்மி ஸஹீட் எனும் இளைஞன் ஒருவர் இலங்கையின் கரையோர வீதிகள் ஊடாக சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தை நடந்து சாதனை செய்தற்காக முயற்சியினை எடுத்துள்ளார்.
இவர் பேருவளையில இருந்து ஆரம்பித்து, தொடர்ந்து 15 நாட்கள் நடந்து செயன்று கொண்டிருக்கின்றார். சனிக்கிழமை (27.07.2024) காலை நிந்தவூரில் இருந்து மட்டக்களப்பு குருக்கள்மடம் வரை தமது பயணத்தை நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில் 50 நாட்கள் கொண்ட இந்த பயணத்தை ஞாயிற்றுக்கிழமை காலை (2.07.2024) குருக்கள்மடம் கிராமத்திலிருந்து தனது பயணத்தை மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்தார்.
நடைப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞனுக்கு கிராமங்கள் தோறும் இளைஞர்கள் வரவேற்று அவருடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொள்ளவதை அவதானிக்க முடிகின்றது.
தனது நடைப் பயணம் தொடர்பில் அவர் கூறுகையில் சுதந்திரமான இலங்கையின் அழகான கரையோரத்தை காலால் நடந்து இரசிப்போம் எனும் தொனிப்பொருளில் தான் இந்த நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment