7 Apr 2024

புன்னக்குளம் கிராமத்திற்கான அரச பேருந்து சேவை முன்னெடுப்பு. உடனடித்தீர்வு.

SHARE

புன்னக்குளம் கிராமத்திற்கான அரச பேருந்து சேவை முன்னெடுப்பு. உடனடித்தீர்வு.

போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னக்குளம் கிராமத்தின் அத்தியாவசிய வீதிகளை செப்பனிடுதல் கிராமத்திலிருந்து நகர் புறங்களுக்கான பேருந்து சேவை பாடசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறைகள் விளையாட்டு மைதான புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த கிராமத்திற்கான   விஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது நவகிரி நகரில் இருந்து புன்னக்குளம் ஊடாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலை வரையான அரச பேருந்து சேவையானது உடன் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், விளையாட்டு மைதானம் புனரமைப்பு பாடசாலைக்கான கட்டிட தேவைகள் புன்னக்குளம் கிராமத்தின் மிக முக்கிய உள்ளக வீதிகளை செப்பனிடுதல் போன்றவற்றிற்கும் தீர்வுகள் எட்டப்பட்டிருந்தது.

அத்தோடு முனைத்தீவு கிராமத்திற்கான கள விஜயத்தினையும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் மேற்கொண்டு இருந்தார். இதன் போது முனைத்தீவு 3ம் குறுக்கு வீதி மற்றும் தளப்பத்து வீதிகளை செப்பனிட்டு தருமாறு குறித்த கிராம மக்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை தொடர்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை செப்பனிடுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

குறித்த களவிஜயத்தின் போது கட்சியின் போரதீவுப் பற்று பிரதேசக் குழு செயலாளர் கோபாலன் பிரசாத், பிரதேசக் குழு இணைப்பாளர் கருணைறாஜன் கட்சியின் புன்னக்குளம் கிராமியக் குழு தலைவர் சேரன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: