சகல பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை பிராந்தியத்திற்கான பிரதான நோன்பு பெருநாள் தொழுகை
செம்மண்ணோடை குபா பெறிய ஜும்ஆப்பள்ளிவாயலின்
ஏற்பாட்டில் செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் குத்பா சிறப்பு பேருரையினையும்
மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி தலைமையில் நடாத்திவைத்தார்.
இதன் போது ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, பதூரியா-மாஞ்சோலை மாவடிச்சேனை, காவத்தமுனை போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து தொழுகையில் சிறுவர்களும்,பெண்களும் ஆண்களும் ஆக பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பல இப்தார் நிகழ்வுகளும் இம்முறை இடம்பெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இவருடம் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய ஐந்து கடமைகளில் முக்கியமான நோன்பினை நோற்று இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பல இப்தார் நிகழ்வுகளும் இம்முறை இடம்பெற்றன.
இதேவேளை நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் எனது வாழ்துக்களை தெரிவிப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிதுள்ளார்.
0 Comments:
Post a Comment