1 Mar 2024

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலை புதுமுக புகுவிழா.

SHARE

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலை புதுமுக புகுவிழா.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குபட்பட்ட புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதுமுக புகுவிழாவும்பாலர் பாடசாலை திறப்பு விழாவும் அகரம் பாலர் பாடசாலை தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை(01.03.2024) நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு ராமகிருஸ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி கலந்து கொண்டார். பார் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது இவ்வருடம் புதிதாக பாலர் பாடசாலைக்கு இணைந்து கொண்ட மாணவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறார்களின் கிராமியக் கலை நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து ராமகிருஸ்ணமிஷன் சுவாமி நீலமாதவானந்தாஜி அவர்களால் மாணவர்களுக்கு ஆசி வழங்கப்பட்டு புதிய பாடசாலையையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இதன்போது சிவ ஸ்ரீ கிரிதரக்குருக்கள், சிறுவர் நன்னடத்தை அதிகாரி பா. சந்திரகாந்தன், கிராமசேவை உத்தியோகத்தர்களான திருமதி.தயனி கிருஸ்ணாகரன், டிலக்சன், ஓய்வு நிலை ஆசிரியை ஜயந்தி, சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











 

 

SHARE

Author: verified_user

0 Comments: