காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சாதனையாளர் பாராட்டு விழா.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் காக்காச்சிவட்டை கிராமத்திலுள்ள அன்னையின் கரங்கள் எனும் அமைப்பின் ஒழுங்கமைப்பில் சாதனையாளர் பாராட்டு விழா வியாழக்கிழமை பிற்பகல் (29.02.2024) வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் வேகுணாளன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்தோர், கல்வி பொதுத்தர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் சித்தியடைந்தோர், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டோர், கல்வியற் கல்விக்கு தெரிவு செய்யப்பட்டோர் போன்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
காக்காச்சிவட்டைக் கிராமத்திலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் அன்னையின் கரங்கள் எனும் அமைப்பின் அனுசரணையினை நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர் ரி.உதயகுமார், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.அருள்ராசா மற்றும் ஆலயக்குருமார் கிராம பொது அமைப்புகளின் பிரிதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment