ஹட்டனில் மாபெரும் சமாதான பெருவிழா
மலையக மக்களுக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா ஹட்டன் டன்பார்வீதி, டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு முகத்துவாரம் மிஷ்பா ஜெப மிஷனரி ஊழியத்தில் நடைபெற்றது. இது குறித்து மிஷ்பா மிஷனரி ஆலயத்தின் தலைமைப் போதகர் ஜெயம் சாரங்கபாணி கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
கண்ணீரோடும், கவலையோடும் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து தேவனுடைய விடுதலையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment