21 Feb 2024

வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும், பொங்கல் விழாவும்.

SHARE

வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும், பொங்கல் விழாவும்.

மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின்  30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும், பொங்கல் விழாவும்  இடம்பெற்றன.

சக்தி இளைஞர் கழகத்தின் தலைவர் செல்வன் .அனுஜன்  தலைமையில் இடம்பெற்ற 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வீதிகளுக்கான பெயர்பலகை அமைத்து திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவும் சிறப்பாக இடம்பெற்றன.    

இதன்போது பாரம்பரிய கலைநயைத்துடன், அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலில் வீதிகளுக்கான பெயர்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொங்கல் விழா இடம்பெற்றது.

மகிழூர்முனை மாணவர்களின் நடனம், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான சமூக சீர்திருத்த நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகளும், இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் சிவாச்சாரியார்..கு.மோகாணந்தம் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி .சபியதாஸ், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் .புவிநாதன், கிராம சேவை உத்தியோகத்தர் .தேவதாஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி உதயகுமாரி ஜெயக்குமாரன், மற்றும் மாவட்ட சம்மேளன தலைவர், பிரதேச சம்மேளன தலைவர், கிராம மட்ட அமைப்புக்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






























SHARE

Author: verified_user

0 Comments: