மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன்பின் மாவட்ட சுதந்திர தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் திருமதி.ஜேஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டின் சுதந்திர தினம் பற்றிய சிறப்பு உரைகளும் இதன்போது இடம் பெற்றன. மாவட்டத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment