28 Feb 2024

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா மற்றும் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை நிறுவனங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில்  தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை அமைப்பினால், கிழக்கு மாகாண வெள்ளப் பாதிப்பு அவசர உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள சுமார் 250 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை(26.2.2024) கதிரவெளி வம்மிவட்டுவான் வித்தியால கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் பிரபல தமிழ் வானொலிச் சேவையான தாயகமும், வன்னி ஹோப் அவுஸ்ரேலியா தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இணைந்து கிழக்கு மாகாண வெள்ளப் பாதிப்பு அவசர நிதி சேகரிப்பு நிகழ்வு ஒன்றை தாயகம் வானொலி ஊடாக மேற்கொண்டிருந்தது. அதன் மூலம் திரட்டிய நிதியினைக் கொண்டு வெள்ளித்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு அப்பியாசப் கொப்பிகளை கொள்வனவு செய்ய முடியாத வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு அவர்கள் மகிழ்ச்சிகரமாக மீண்டும் பாடசாலைக்குச் செல்வதற்கான உதவிகளே இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் மூன்று கிராமங்களில் உள்ள தரம் ஒன்று தொடக்கம் 11 வரையான பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான  கற்றல் உபகரணங்கள் அன்றை தினம் வழங்கி வைக்கப்பபட்டன.

குறித்த உதவி மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்குச் சென்று தங்களுடைய கற்றல் நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு இது உதவுவதுடன், சமகால பொருளாதார சூழலில் அதிக விலைக் கொடுத்து அப்பியாசக் கொப்பிகளைகொள்வானவுசெய்வதற்கு இயலுமையற்ற நிலையில் இருஇருந்த மாணவர்களுக்கு இந்த உதவி கிடைக்கப்பெற்றதையிட்டு மாணவர்களும் பெற்றோர்களும், கல்வி சமூகமும் தாயக தமிழ் ஒளிபரப்புச் சேவைக்கும், வன்னி ஹோப் நிறுவனத்திற்கும், உதவி வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும்  நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தாயகம் தமிழ் ஒளிபரப்பு சேவை மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மற்றும் பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.














 

SHARE

Author: verified_user

0 Comments: