கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருமண்வெளி பொது நூலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நூலக பொறுப்பாளர் சீ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
பிரான்சில் வசிக்கும் சமூக சேவையாளரான வரதராஜன் அச்சுதன் என்பவரினால் வழங்கப்பட்ட நிதி உதவியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.குகநேசன், கிராமசேவகர் திருமதி.நிறோஜினி பிரசாந்த், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயக்காந்தன் மற்றும் வாசகர் வட்டம், சிறுவர் வாசகர் வட்டம் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment